
தமிழகம்
விலையில் எந்த மாற்றமும் இல்லை; விரக்தியில் வாகன ஓட்டிகள்!!
சில நாட்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. அதுவும் குறிப்பாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பெட்ரோல் வாகன ஓட்டிகளின் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்காக பலரும் போராட்டம் செய்தனர். அதன் எதிர் கட்டமாக திடீரென்று தமிழகத்தில் பெட்ரோல் விலை 7 ரூபாய் வரையும், டீசல் விலை ரூபாய் 6 வரையும் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு இன்று வரையும் மாற்றப்படாமல் அதே விலையில் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.
அதன்படி சென்னையில் விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்து வருகிறது. ஒரு ரூபாய் 102.63 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு லிட்டர் டீசலின் விலை மாற்றம் இல்லை.
ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 94.24 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விலை அதிகரிக்க இல்லாவிட்டாலும் அதே விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஓரளவு திருப்தியில் உள்ளனர்.
