ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338 , டீசல் ரூ.289க்கு விற்பனை;; வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சி!!

இலங்கை அதிபர் கோத்தபாய ராயபக்சே பதவி விலக வலியுறுத்தி மக்கள் நடத்தும் கிளர்ச்சி தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பெட்ரோல் டீசல் விலை பெருமளவு உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்சாரம், எரிபொருட்களின் விலை மற்றும் மருந்து தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தது அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டங்களை முன் எடுத்துள்ளனர்.

இதனிடையே மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையினை திடீர் என உயர்த்தியுள்ளது. அதன் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 35 ரூபாயும், டீசல் விலை ரூ. 17 என அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இதனால் ரூ. 303 – க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 338- க்கும், ரூ. 214 – க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ. 289 என விற்பனையாகிறது.

மேலும், இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment