Connect with us

21 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..! வாகன ஓட்டிகள் புலம்பல்;

பெட்ரோல்

தமிழகம்

21 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..! வாகன ஓட்டிகள் புலம்பல்;

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நம் தமிழகத்தில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஏனென்றால் அதற்கு முன்பு சுமார் நூற்றி முப்பத்தி ஆறு நாட்கள் வரை நம் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றம் இல்லாமல் காணப்பட்டது.

அதற்குப் பின்பு தினமும் சராசரியாக 76 காசுகள் என்ற வீதத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்துள்ளதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. இதனால் 21 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்று விற்பனையான விலைக்கே இன்றும் பெட்ரோல் விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 110.85க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே வேளையில் டீசல் விலையிலும் எந்த ஒரு மாற்றம் இல்லை. இதனால் டீசல் விலை 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாலும் கூட பெட்ரோல் டீசல் விலை என்னமோ அதிகமாக தான் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top