பெட்ரோல், டீசல் கார்களுக்கு விரைவில் செக்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி!!

பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தின் புதிய ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் வரும் காலங்களில் கச்சாஎண்ணெய்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் காரணமாக அனைத்து வாகனங்களும் மின்சார வாகனத்திற்கு மாற முடிவெடுத்துள்ளனர்.

நுரையீரல் அறுவை சிகிச்சை! “ ரூ.5 லட்சம் ” கொடுத்த கலைப்புலி எஸ் தாணு!

அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன் படி, கார் தயாரிப்பாளர்கள் வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றத்தினை தடுக்க வருகின்ற 2035-ம் ஆண்டிற்குள் 100% குறைக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தின் புதிய ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக 2035-ம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவுக்கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment