Connect with us

இஸ்லாமியர்களின் வீடு, கடைகள் இடிப்பு… உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுவால் பரபரப்பு!

demolished

செய்திகள்

இஸ்லாமியர்களின் வீடு, கடைகள் இடிப்பு… உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுவால் பரபரப்பு!

இஸ்லாமியர்களின் வீடு, கடைகள் இடிப்பு… உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுவால் பரபரப்பு!

வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இஸ்லாமியர்களின் வீடுகள் , கடைகள் , இடிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி டெல்லியில் ஜஹாங்கீர் பூரி பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவின் போது கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல்வேறு கடைகள், வீடுகள் கற்களால் தாக்கி சேதமடைந்தன.

இதுபோன்ற வன்முறை சம்பவங்களின் போது இஸ்லாமியர்களின் கடை மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், மாநில அரசுகளே அவர்களது வீடு மற்றும் கடைகளை புல்டோசர்கள் கொண்டு இடிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பான ஜமாய் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இவ்வாறு மாநில அரசுகள் செயல்படுவது சட்டவிரோதம் என்றும் எனவே உடனடியாக இந்த புல்டோசர் பயன்படுத்தும் ஆபத்தான அரசியலை கைவிட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top