பல ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை கலைப்பதாக காணப்படுகிறது நீட்தேர்வு. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் நீட் தேர்விற்காக ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டே வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் நீட்தேர்வு மறுபடி நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது பலருக்கும் பேரதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதன்படி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது பற்றி கல்வித்துறை தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் தவிர நீதிமன்றம் அல்ல என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்தினை முன் வைத்தனர். கல்வித்துறையின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் ரவீந்திர பட், திரிவேதி தீர்ப்பளித்தனர்.