Connect with us

திருநங்கைகள் குறித்து சர்ச்சை பதிவு: கஸ்தூரி மீது வழக்கா?

Entertainment

திருநங்கைகள் குறித்து சர்ச்சை பதிவு: கஸ்தூரி மீது வழக்கா?

aebd8bd56d569024aeefeea88c26a411

சமீபத்தில் தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்படவுள்ளது. இந்த நிலையில் இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தது மட்டுமின்றி திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் ஒரு கருத்தையும் அதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கஸ்தூரி அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டார்.

384a123dbfd1d0dcc8b882cf0f2d02b2-1இந்த நிலையில் இது குறித்து மதுரை போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர் வாதம் அவர்களிடம் திராவிடர் விடுதலைக்கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணியழகன் புகார் மனு அளித்தார். இந்த மனுவில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திரு நங்கைகளை அவமதித்தும் கருத்துகளை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top