லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிய நகையை கேட்டு மனு; தள்ளுபடி செய்து உத்தரவு!

சில நாட்களாக நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை அடுத்தடுத்து நடைபெற்றது. அதன் விளைவாக கணக்கில்லாத பணம், நகை போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நகை

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை மீண்டும் திரும்ப தரக் கோரி மனு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்த ரூபாய் 1.58 கோடி மதிப்புள்ள நகைகளை திரும்ப தர கோரிய மனுவை சென்னை சிறப்புநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய சுற்றுலா துறை அதிகாரி பாண்டியன் வீட்டில் ரூபாய் 1.58 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனால் சுற்றுலா துறை அதிகாரி பாண்டியனின்  மனைவி லதா இத்தகைய மனுவை தாக்கல் செய்திருந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்புநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வருமானத்தில்தான் நகைகளை வாங்கி அதற்கான ஆதாரங்கள் ஒன்றும் தாக்கல் செய்யவில்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் லதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment