Connect with us

விளையாட்டு வகுப்பை கடன் கேட்கும் கணித ஆசிரியர்கள்- காலம் காலமான அவல நிலை

Special Articles

விளையாட்டு வகுப்பை கடன் கேட்கும் கணித ஆசிரியர்கள்- காலம் காலமான அவல நிலை

கடந்த பல வருடங்களாக பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் மாணவர்கள் அனைவரும் ஜெயித்து விட வேண்டும் யாரும் தோல்வியடைந்து விடக்கூடாது என பல பள்ளிகள் நினைக்கின்றன. நல்ல நினைப்புதான் தவறில்லை ஏனென்றால் பெரும்பாலான மாணவர்களுக்கு கணிதமும், ஆங்கிலமும் சுட்டுப்பட்டாலும் வராது. கணிதம் வராத மாணவர்கள் அதிகம் உள்ளனர்.

65b6b67ce0fb7249912e8435809a0eea

பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் எல்லா மாணவர்களும் தேர்ச்சியடைய வேண்டும் என ஆசிரியர்கள் தீவிரமாக செயல்படுவர். வாரத்தின் இரண்டு விடுமுறை நாட்களும் சிறப்பு வகுப்பு வைப்பர்

கணிதம், ஆங்கிலப்பாடத்தை தீவிரமாக எடுப்பர். இந்த வருடங்களில் ஆசிரியர்களுக்கும் ஓய்வில்லை மாணவர்களுக்கும் ஓய்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பெரிய விசயமானாலும் சிறிய ஓய்வு இருந்தால்தான் ஒரு மாணவனால் அடுத்த கட்ட முயற்சிகளுக்குள் செல்ல முடியும்.

தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பதும் நற்பலனை தராது.அவன் மூளையை சோர்வடைய செய்யும்.

கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும் என்பதற்காகத்தான் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு பீரியட் செயல்படுகிறது.

ஒரு மணி நேரமோ அரைமணி நேரமோ விளையாடுவதால் அவன் படித்த பாடத்தை மறந்து விடப்போவதில்லை. அவனை பூஸ்ட் செய்ய உதவுவதுதான் விளையாட்டு.

ஆனால் நான் சொல்லும் இந்த குறிப்பிட்ட 10 வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் வருடங்களில், கணித ஆசிரியர்கள் பலர் விளையாட்டு ஆசிரியரிடம் அனுமதி பெற்று விளையாட்டு வகுப்பையும் சேர்த்து எடுத்து கொள்வர்.

உதாரணமாக மதியம் ஒரு 45 நிமிடம் கணித வகுப்பு முதலில் தொடங்குகிறது என்றால் அடுத்தடுத்து இரண்டு வகுப்புகள் விளையாட்டு வகுப்புகளாக இருக்கும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இப்படி இருக்கும்.

அதை மொத்தமாக விளையாட்டு ஆசிரியரிடம் அனுமதி பெற்று கணித பாடம் நடத்துகிறேன் என 3மணி நேரத்துக்கு மேல் நம்மை சோர்வடைய வைப்பது பல வருடமாக நடந்து வருகிறது.

இது பொதுவாக எல்லா ஊர் பள்ளிகளிலும் நடக்க கூடிய விசயமாகும். இது போன்ற விசயங்கள் அப்பாடத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தாது. மறைமுக எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் படிப்புக்கு நடுவே சில மணி நேரம் விளையாடுவதால் அவனுடைய எனர்ஜி, அவனுடைய மனவளம், அறிவு அனைத்தும் கூடுமே தவிர ஒரு போதும் குறையாது.

இனி வரும் நாட்களிலாவது இது போல கடின முறைகளை தவிர்த்து மாணவர்களை விளையாட வைத்து பின்பு ஆசிரியர்கள் படிக்க வைப்பது அவசியமான ஒன்றாகும்.

நாளை ஆசிரியர் தினம் இந்த நல்ல நாளில் இந்த உறுதிமொழியை ஆசிரியர்கள் ஏற்றால் சிறப்பு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Special Articles

 • c9451dbfda167a6c045322ecee7d8937 c9451dbfda167a6c045322ecee7d8937

  Special Articles

  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்!

  By

  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்? மொத்தம் ஜந்து நிலைதான் நீங்கள் விண்ணப்பிக்க…...

 • 70494407 70494407

  Special Articles

  நலங்கு மாவு செய்வது எப்படி? மற்றும் அதன் பயன்கள்..! முழு விபரம்…

  By

  பொதுவாக முகத்திற்கு அதிகம் செயற்கை பொருட்களை பயன்படுத்துதல், காற்று மாசு, துரித உணவு அதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது....

 • kuttys kuttys

  Special Articles

  தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து நமக்கு தெரியாத பல உண்மைகள் !!

  By

  தாய்ப்பாலின் மகத்துவம்   தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் ஏனென்றால் இந்த உலகில் அந்த தாய்ப்பாலுக்கு சரிசமான ஒன்று எதுவுமில்லை பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், பெரும்காரணமாக இருப்பது தாய்ப்பால் ஒன்றே   உலகத்தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டமானது உலகெங்கும் 170க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது.   தாய்ப்பாலின் சத்துக்கள்:   குழந்தை பிரசவமானவுடன் முதல் நாளான்று உருவாகும் சீம்பால் அடர்த்தியான சத்துக்களை கொண்டது அது மட்டுமல்ல பாக்டீரியா வைரஸ் போன்ற கிருமிகளில் இருந்து தாக்குதலை எதிர்கொள்கிறது.   தாய்ப்பால் புகட்டுவதால் சேய்க்கு மட்டும் பயன் கிடைப்பதில்லை அது தாய்க்கும் நல்ல பயன் தருகிறது, தாயின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் தாக்கத்திலிருந்தும் காக்கப்படுகிறது   குழந்தைகளுக்கு கட்டாயம் 6- மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும் அதற்கு பிறகு தான் பிற உணவுகள் சேர்த்து வழங்கப்பட வேண்டும் அதிலும் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது.   இது குழந்தைகளின் சிறுவயதில் ஏற்படக்கூடிய நோய்கள் மட்டுமல்ல பிற்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்தும் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. சத்து மிகுந்த தாய்ப்பாலில் உள்ள என்ûஸம்கள்; மற்றும் நோய் எதிர்ப்புச்சத்துக்கள் ஆகியவை குழந்தைகளது மென்மையான உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து பரிபூரண வளர்ச்சியை அளிக்கும் ;  ...

 • images 2 images 2

  Special Articles

  கச்சதீவு குத்தகைக்கு விட போறீங்களா !! முழு தகவல் இதோ ..

  By

  இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில்...

 • blind mexico village blind mexico village

  Special Articles

  கிராமத்தில் யாருக்கும் பார்வை இல்லை… விசித்திர கிராமம்?…

  By

  மெக்ஸிகோவில் அமைந்துள்ள டில்டெபெக் கிராமம் பார்வையற்றோரின் கிராமம் (Village Of Blind People) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் மனிதர்களளுக்கு மட்டும்...

To Top