பெருமாள் கோவில் தீர்த்தத்தின் ரகசியம் இதுதான்..

கோவிலுக்கு போனால் சாமி கும்பிடுவது மனசுக்கு நிறைவை தரும். சைவக்கோவில்களில் விபூதியும், குங்குமமும் பிரசாதமாய் தருவார்கள். அதே, வைணவ கோவில்களில் தீர்த்தம், துளசியை பிரசாதமாய்ய் தருவார்கள். பெருமாள் கோவில்களில் தரும் தீர்த்தம் இறையருளோடு வாசனை நிரம்பியதாய் இருக்கும். வீடுகளில் பெருமாளுக்கு பூஜை செய்யும்போது தீர்த்தம் வைத்தாலும் கோவிலில் தரும் தீர்த்தம் போன்று வாசனையோடும், சுவையோடும் இருப்பதைல்லை.

இனி, அதேப்போன்ற வாசனையோடும், சுவையோடும் இன் வீட்டிலேயும் செய்யலாம்.

7d143d4802b844c575e58a5df518471e

தேவையானப்பொருட்கள்..

1 – ஏலக்காய்,
2 – இலவங்கம், 
3 – வால்மிளகு, 
4 – ஜாதிப்பத்திரி,
5 – பச்சைக் கற்பூரம் 

020807c6ba297b963773b61cfe0e8e63

மேலே சொன்னவற்றில் ஏலக்காய், இலவங்கம், வால்மிளகு, ஜாதிப்பத்திரி ஆகியவற்றில் தலா ஒரு பங்கு எடுத்து இடித்து, அவற்றோடு பச்சை கற்பூரத்தையும் சேர்த்து கலந்து காற்று புகாமல் சேமித்து வைக்க வேண்டும்.

பூஜையின்போது, தேவைக்கேற்ப நீரில் கலந்து, பூஜைக்கு பயன்படுத்தலாம். செம்பு அல்லது வெள்ளிப்பாத்திரத்தில் மட்டுமே இந்த தீர்த்தத்தை தயார் செய்யவேண்டும். சைவர்கள் வில்வத்தையும், வைணவர்கள் துளசியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

முதல் நாளே, ஒரு டம்ப்ளர் நீரில் கலந்து வைத்துவிட்டு மறுநாள் காலை பூஜை முடித்து இத்தீர்த்தை அருந்தினால் சகல நோய்களும் நீங்கி உடல் நலம் பெறும்.

இப்படி இந்த தீர்த்தத்தினை அருந்தி வந்தால் இதயம், இரைப்பை பலம் பெரும். கண் நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி, சளி, சுவாசகாசம் என சொல்லப்படும் டஸ்ட் அலர்ஜி நீங்கும். ரத்தம் சுத்தமாகும். வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், மூச்சடைப்பு, வயிற்றுவலி நீக்கும் சர்வரோக நிவாரணியாகும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews