ஐஸ் கிரீம் ஆர்டர் செய்தவருக்கு ஆணுறை..!!! சிக்கலில் ஸ்விகி..!!!

கோவையில் குழந்தைகளுக்காக ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தபோது ஆணுறை டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் புகைப்பட கலைஞராக பணியாற்றும் பெரியசாமி என்பவர் தனது குழந்தைகளுக்காக சுகி ஆப் மூலமாக ஐஸ் கிரீம் மற்றும் ஜிப்ஸ் ரூ.207-க்கு ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெலிவரி செய்யப்பட்ட பார்சலில் ஆணுறை இருப்பதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இத்தகைய சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்விகி  நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஸ்விகி நிறுவனமானது தவறான பொருளை டெலிவரி செய்ததற்காக வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளது. அதோடு அவருடைய பணமானது திரும்ப அனுப்பியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தனக்கு பணம் வேண்டாம் ஆர்டர் செய்த பொருட்கள் மட்டும் கொடுத்தால் போதும் என பெரியசாமி ஸ்விகி  நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சம்பவமானது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஸ்விகி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.