தூக்கு மாட்டி பிளாக்மெயில் செய்த நபர் நிஜமாகவே உயிரிழப்பு.!!

நம் தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் காணப்படுகிறது. இது மிகுந்த வேதனை அளித்தாலும் ஒரு சில இடங்களில் இதனை பயன்படுத்தி பிளாக் மெயில் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படுகிறது.

இவ்வாறு செய்த ஒருவர் நிஜமாகவே உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அதன்படி காட்பாடி அருகே பெண் நண்பரை மிரட்ட தூக்கு மாட்டி நாடகமாடிய இசைக்கச்சேரி பாடகர் நிஜமாகவே உயிரிழந்துள்ளார்.

பொன்னை இடையக்குப்பம் பகுதியில் சேர்ந்த ராஜாவு தனது இசைக் குழுவில் உள்ள பாடகி சித்ராவுடன் நெருங்கி பழகி வந்தார். மனைவிக்கு தெரியாமல் தனி வீடு எடுத்து பெண் நண்பர் சித்ராவுடன் தனியாக வசித்து வந்த நிலையில் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

பெண் நண்பரை மிரட்ட தனது அறையில் தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தூக்கு மாட்டிக் கொள்வது போல் நாடகமாடிய நிலையில் எதிர்பாராத விதமாக ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீடியோ பதிவை பார்த்த பெண் நண்பர் சித்ரா அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment