மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை; இந்த மாத முழுவதும் வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி!

சமீபகாலமாக அரசு ஊழியர்கள் பலரும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களில் வொர்க் பிரம் ஹோம் முறையும் அமலில் காணப்படுகிறது. ஏனென்றால் எதிர்பாராதவிதமாக இந்தியா நோய் பிடிக்குள் மாட்டியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளும் கொரோனா நோயின் தாக்கத்தில் சிக்கியுள்ளதாக காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு அளிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனவரி 31-ம் தேதி வரை கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் வீட்டிலிருந்த பணிபுரிய வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். துணை செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் கூறினார். அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment