பேனர்களை அகற்றுங்கள்! மீறினால் சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் வசூலிக்க அனுமதி: சென்னை மாநகராட்சி

சில வருடங்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் பேனரால் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. ஏனென்றால் சாலைகளில் வைக்கப்படும் அரசியல் கட்சித் தலைவர்களின் பேனர்கள் எதிர்பாராதவிதமாக சரிந்து விழும் போது வாகன ஓட்டிகள் மீது விழுவதால் வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்கினார்.

இதன் பின்னர் தமிழகத்தில் பேனர்கள் வைக்கப்படுவது முற்றிலும் குறைக்கப்பட்டது. ஆயினும் அவ்வப்போது சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டு காணப்படுகின்றன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பேனர்களை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அனுமதியின்றியும் விதிகளை மீறியும் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பேனர்களை அகற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அபராதம் வசூலிக்கவும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவு மீதான நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் இத்தகைய நடவடிக்கை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று காணப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment