அதிமுகவின் பொன்விழா: தலைவர் நினைவிடங்களில் மரியாதை செலுத்த அனுமதி வேண்டும்!!!

தற்போது நம் தமிழகத்தில் மிகப்பெரிய வலிமையான எதிர்க்கட்சியாக அதிமுக அமைந்துள்ளது மேலும் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் ஆட்சி நடைபெற்றது என்றே கூறலாம்.அந்த 10 ஆண்டு ஆட்சியில் அதிமுகவின் சார்பில் மூன்று முதல்வர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்தனர்.அதிமுக

அதிமுகவிற்கு மிகவும் வலிமையான அஸ்திவாரத்தை ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் போட்டு வைத்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் அசைக்கமுடியாத எதிர் கட்சியாக அதிமுக காணப்படுகிறது.

இவ்வாறு வலிமையான அதிமுக தற்போது பொன்விழாவை நெருங்கியுள்ளது. இதற்காக அதிமுக பொன்விழாவை ஒட்டி தலைவர்களின் நிமிடங்களில் மரியாதை செலுத்த அனுமதி கோரி அதிமுக தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 17 ஆம் தேதி அன்று அதிமுகவின் பொன் விழாவாக உள்ளதால் அன்றைய தினம் அனுமதி வழங்க கோரி அதிமுக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொன் விழாவையொட்டி  அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவு இடங்களில் வருகின்ற 17 ஆம் தேதி  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment