மீண்டும் ஊரடங்கா? தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அனுமதி!-ஒன்றிய அரசு;

தற்போது வேகமாக பரவி வரும் ஒமைக்ரானை கட்டுபடுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல் கூறியுள்ளது. இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. அதுவும் குறிப்பாக இங்கிலாந்தில் ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது.

அங்கு டெல்டா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. ரயில் ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட செல்வதில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அமெரிக்காவிலும் ஒரே வாரத்தில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்றையதினம் இறுதியில் 216 ஆக ஒமைக்ரான் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 பேருக்கும், டெல்லி மாநிலத்தில்54 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. தெலுங்கானாவில் 20 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. கேரளாவில் 15 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.

4 நாட்களில் ஒமைக்ரான் இரட்டிப்பாக்கி உள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியதால் ஒன்றிய அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கட்டுப்பாடுகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக ஆகலாம் என்றும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. மீண்டும் அவசர உதவி மையம் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment