மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி: ஐகோர்ட் கிளை உத்தரவு!!

நெல்லையில் மாலை நேர கபடி போட்டிகளை அனுமதிக்க உத்தரவிட கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மாலை நேரங்களில் கபடி போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி கடும் கட்டுப்பாடுகளை விதித்து மாலை நேர கபடி போட்டிகளை அனுமதி வழங்கியுள்ளார்.

அதன் படி, வீரர்களின் ஆடைகளில் அரசியல், ஜாதியை குறிக்கும் சின்னங்களோ அல்லது அரசியல் தலைவர்களின் படங்களோ இருக்கக் கூடாது என நீதிபதி தெரிவித்தார்.

அதே போல் போட்டியில் பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை பொருட்களோ, மதுவோ அறிந்தியிருக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை மீறும் வகையில் போட்டிகள் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment