இந்த பொங்கலுக்கு சேவல் சண்டை நடத்த அனுமதி! ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு!!

தமிழர்கள் என்றாலே இந்தியாவில் எத்தனை மாநிலத்திற்கு ஒருவிதமான மதிப்பு உருவாகும். ஏனென்றால் கொண்டிருந்த காலத்தில் தமிழர்களின் மரபு பலரையும் வியக்க தக்கதாக அமைந்தது. அதோடு தமிழர்கள் பொழுதுபோக்காக பல வீர விளையாட்டுகளை வைத்திருந்தனர். இவை அனைத்தும் தமிழர்களின் மதிப்பை பறைசாற்றுவதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழர்களின் பொழுதுபோக்காக காணப்பட்ட விளையாட்டு போட்டிக்கு ஹைகோர்ட் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது அமைந்துள்ளது. அதன்படி சேவல் சண்டை நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. ஆயினும் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கியது ஹைகோர்ட் மதுரை கிளை.

அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சேர்ந்த தங்கமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து விதமான முன்னேற்பாடுகளுடன் சேவல் சண்டை நடத்தப்படும் என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். சேவல் சண்டையின் போது சேவலின் காலில் கத்தியைக் கட்டக்கூடாது என்று  நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.

சண்டை போடும் இரண்டு சேவல் களும் உயிருடன் இருக்க வேண்டும்; ஒரு சேவல் கூட உயிர் இழக்கக் கூடாது என்றும் நீதிபதி விதிமுறைகளை கூறியுள்ளார். ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஜனவரி 17-ஆம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment