அணுக்கழிவு சேமிப்பு மையத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!!:வைகோ;

நம் தமிழகத்தில் அணுமின் நிலையம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் இங்கு அணுக்கழிவுகள் அனைத்து ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் என்பது போல்தான் ஒப்பந்தம் உள்ளது.

ஆனால் ரஷ்ய அணு கழிவுகளை வாங்க மறுத்ததால் கூடங்குளம் பகுதியிலேயே சேமிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆரம்பம் முதலே இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினமும் அணுக்கழிவு சேமிப்பு மையத்திற்கு அனுமதி கூடாது என்று கூறியுள்ளார். கூடங்குளத்தில் அணு கழிவு சேமிப்பு மையம் அமைக்க தமிழக அரசு எப்போதும் அனுமதி தரக்கூடாது என்று கூறியுள்ளார்.

கூடங்குளத்தில் அணு கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். கூடங்குளம் வளாகத்தில் பாதுகாப்பு மையம் அப்பகுதி மக்கள் எதிர்க்கின்றனர் என்று வைகோ கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment