பட்டினப்பிரவேசம் நடத்த முதலமைச்சர் அனுமதி? தருமபுரம் ஆதீனம் பேட்டி;

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பிரச்சினையாக காணப்படுவது பட்டணப் பிரவேசம் பற்றி தான். ஏனென்றால் பட்டனப்ரவேஷம் நடத்த அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதற்கு தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்றும் கூறியிருந்தார்.  இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதன்படி பட்டினப்பிரவேசம் நடத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியதாக அவர் கூறினார். மயிலாடுதுறை குத்தாலத்தில் நடைபெற்ற கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மபுரம் ஆதீனம் இவ்வாறு பேட்டி அளித்தார்.

பல்வேறு ஆதீனங்கள் நேற்றைய தினம் சென்னையில் முதல் அமைச்சரை சந்தித்த நிலையில் இன்று தர்மபுரம் அதினம் பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 22ஆம் தேதி தருமபுர ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment