Connect with us

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியை ஏற்றி, இறக்க நிரந்தர இடம்!!-மனு தள்ளுபடி

கோயம்பேடு

Tamil Nadu

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியை ஏற்றி, இறக்க நிரந்தர இடம்!!-மனு தள்ளுபடி

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியை ஏற்றி, இறக்க நிரந்தர இடம்!!-மனு தள்ளுபடி

தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தை காணப்படுவது கோயம்பேடு மார்க்கெட் தான். இந்த கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏற்றி இறக்கும் இடம் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏற்றி, இறக்கும் இடத்தை நிரந்தரமாக ஒதுக்க  கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மூடிக்கிடக்கும் காலியிடத்தை திறக்க வேண்டும் என்று தந்தை பெரியார் தக்காளியும் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டது. தக்காளி விலை உச்சத்தில் இருந்தபோது தக்காளி ஏற்றி இறக்க அனுமதித்தும், நிரந்தரமாக ஒதுக்க மறுத்தும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருப்பினும் இந்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தபோது அதனை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top