இந்தியாவிலேயே மிகப்பெரிய பலம் பெறும் தொலைக்காட்சி என்றால் அதனை பொதிகை சேனல் என்று கூறலாம். இந்த ஆண்டோடு ராமேஸ்வரத்தில் தூர்தர்ஷன் சேவை நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ராமேஸ்வரம் தூர்தர்ஷன் சேவை மையத்தின் துணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் அறிவித்தார். ஏனென்றால் பெரும்பாலானோர் தற்போது தரைவழி நிகழ்ச்சியை பார்ப்பது அரிதாகிவிட்டது.
தமிழகத்தில் தற்போது கேபிள் தொலைக்காட்சி சேவை குறைந்து கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் DTH களின் வரத்து அதிகரித்துள்ளது.இதன் விளைவாக பெரும்பாலான மக்கள் DTHகளை விரும்புகின்றனர்.
இதன் விளைவாக ராமேஸ்வரம் தூர்தர்ஷன் சேவை மையம் நிரந்தரமாக மூடப்படுகிறது. இதனால் ராமேஸ்வரத்தில் உள்ள உயர் சக்தி டிரான்ஸ் மீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியின் தரைவழி ஒளிபரப்பு சேவை டிசம்பர் 31ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இருப்பினும் DTHல் இந்த சேவை தொடரும் என்றும் கூறப்படுகிறது.