Connect with us

“பிரேமம்” -ல் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது இவங்களா?.. அவங்க தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் ஆச்சே!!..

permam pic

பொழுதுபோக்கு

“பிரேமம்” -ல் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது இவங்களா?.. அவங்க தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் ஆச்சே!!..

பிரேமம் படம் முழுக்க முழுக்க காதல் சென்டிமெண்ட் படமாக உருவாகி இருந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த படம் 2015ம் ஆண்டு வெளியாகியது மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாய் பல்லவி உடன் இணைந்து மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரி, நிவின் பாலி மற்றும் பலர் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார்.

premam2

திறமை மற்றும் அழகு இருப்பவர்கள் ஒரு ஓவர் நைட்டில் கூட பிரபலம் அடைந்து விட முடியும் என்பதற்கு சான்று இப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர்.

permam3

இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த டீச்சர் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதனை தொடக்கமாக கொண்டு அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது வளர்ச்சியை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உள்ளதாக ஒரு தகவல்கள் கூறப்படுகின்றன.

asin

இப்படி இருக்கின்ற நிலையில் பிரேமம் படத்தில் சாய்பல்லவியின் டீச்சர் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இவர் இல்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்தில் வேறு ஒரு நடிகையை தான் முதலில் நடிக்க வைக்க அல்போன்ஸ் புத்திரன் நினைத்தார்.அந்த நடிகை வேறு யாருமல்ல நம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய அசின் தான் முதலில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு சாய்பல்லவிக்கு கிடைத்து பின்னர் நடித்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top