இன்று தஞ்சையில் பெரியசாமி தலைமையில் அமைச்சர் குழு ஆய்வு; நாளை முதல்வர் ஆய்வு!

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் அதிகம் காணப்படுகின்ற டெல்டா மாவட்டங்களில் பயிர் நிலங்கள், பயிர் மூட்டைகள் அனைத்தும் பெரும் சேதமடைந்தன.

 

நெல் மூட்டைகள்

இது குறித்து ஆய்வு செய்ய நேற்றைய தினம் தமிழக முதல்வர்  ஸ்டாலின் அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். அந்த அமைச்சர் குழுவினை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

அதில் அன்பில் பொய்யாமொழி, தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி உள்ளிட்ட பல அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் நேரில் சென்று டெல்டா  மாவட்டங்களில் ஆய்வு செய்யவும் தமிழக முதல்வர்  ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அமைச்சர் குழு டெல்டா மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தது. பின்னர் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார்.

ஸ்டாலின்

இதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய நாளையதினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து ஆய்வு செய்வார் என்று கூறியுள்ளார். இன்றைய தினம் அமைச்சர் குழு தஞ்சை மாவட்டத்தில் நேரில் சென்று பயிர் சேதங்களை ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment