தந்தை பெரியார் நினைவு தினம் : முதல்வர் மரியாதை

பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மறைந்தார். ஒவ்வொரு வருடமும் அவர் நினைவு நாளில் அரசியல் தலைவர்கள் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.

இன்று தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினம்  ஆகும். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பெரியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தந்தைப் பெரியாரின் 48 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை  சிம்சன் சிக்னலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் தந்தை பெரியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment