சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரி: போராடியவரை லாரி ஏற்றி கொலை!!

கரூரில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரியை மூட போராடியவர் லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் தன்னுடைய தோட்டத்தின் அருகே செல்வகுமார் என்பவர் கல்வாரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 2019-ஆண்டு இருவருக்கும் இடபிரச்சனை இருந்து வந்துள்ளது.

அப்போது செல்வ குமார் ஜெயநாதனை கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்குப்பதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் செருப்பு குமார் இயக்கி வந்த குவாரி காலாவதி ஆகி விட்ட பிறகும் சட்ட விரோதமாக இயக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஜெகநாதன் புகார் அளித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் குவாரியை மூடினர். இந்த சூழலில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெகநாதன் மீது லாரி ஒன்று மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதனிடையே சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் மோதிய லாரி செல்வகுமாருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

தற்போது கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் லாரி ஓட்டுனர் சக்திவேலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment