பேரறிவாளன் விடுதலை விவகாரம்: தமிழக முதல்வர் வரவேற்பு !!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில் தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே சமீபத்தில் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவு எடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது. அதோடு பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது என்றும் கூறியது.

இந்த வழக்கின் விசாரணை இன்று  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அமர்வில் வந்தது. இதில்  பேரறிவாளனை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழலில் பேரறிவாளன் விடுதலை கூட்டாட்சி தத்துவத்திற்கு, மாநில சுயாட்சிக்கும் இலக்கணமாக அமைந்த தீர்ப்பு என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.  மேலும், சட்டம், நீதி, அரசியல் நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெற்றத்தக்க தீர்ப்பு என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment