Connect with us

#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

perarivalan 1024x429 1024x429 1

செய்திகள்

#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் , போபண்ணா அடங்கிய அமர்வு ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என கண்டனம் தெரிவித்தது. மேலும் சட்டப்பிரிவு 142-யைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது 161 வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால் உச்ச நீதிமன்றமே 142வது பிரிவை பயன்படுத்தி பேராறிவாளனை விடுதலை செய்துள்ளது.

மேலும் மாநில அரசு முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளதாகவும், ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் கடந்த 11ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. அப்போது தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். அதனை குடியரசுத்தலைவர் நிராகரிப்பது, கருணை காட்டுவது, அல்லது ஆளுநர் முடிவுக்கே விடுவது என மூன்று விஷயங்கள் உள்ளன, இதில் ஏதாவது ஒன்றை குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுப்பது தான் சுமூகமான வாய்ப்பு என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பேரறிவாளன் மற்றும் தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க ஆளுநர் மட்டுமே அதிகாரம் படைத்தவர் என்றால் தேவையில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வது தான் ஆளுநருக்கு உள்ள வாய்ப்பு என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விடுதலைக்கு விவகாரத்தில் மட்டுமல்ல, பல விவகாரங்களில் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். அதில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள் என மத்திய அரசுக்கு கேள்விகளை முன்வைத்தனர். மேலும் இந்த விவகாரத்திற்கு மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவிப்பதற்கான உத்தரவை வெளியிட்டு விடுவோம் என தெரிவித்திருந்தனர்.

இன்றைய விசாரணையின் போது எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேரறிவாளனின் நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top