Connect with us

11 சென்டிமீட்டர் மழையை பெற்று முதலிடத்தில் இருக்கும் பெரம்பலூர்!!

Rain 3

Tamil Nadu

11 சென்டிமீட்டர் மழையை பெற்று முதலிடத்தில் இருக்கும் பெரம்பலூர்!!

தமிழகத்தில் நேற்றைய தினம் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக மத்திய தமிழக மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் பெரம்பலூர் மாவட்டத்தில் மழை காலத்தில் கூட இந்த அளவிற்கு மழை பெய்வது இல்லை. இந்த நிலையில் அதிகமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 11  சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில் துறைப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஏ ஆர் ஜி பகுதியில் தலா ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஸ்பேட்டை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top