பொதுவாக குழந்தைக்கு சூடு வைப்பது, கொடூரமாக துன்புறுத்துவது போன்ற விசயங்களை தற்போது சில அறிவில்லாத பெற்றோர் செய்து வருகின்றனர்.
காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறை மிகவும் ஆபத்தானது ஆகும். இது போல செயல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் உறவினர் வீட்டில் 70 ரூபாய் பணம் திருடியதற்காக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் பெண் ஒருவர் தனது மகளுக்கு விநோதமாக தண்டனை கொடுக்கிறேன் என மிளகாய் புகையை நுகர செய்துள்ளார்.
இதனால் சுவாச பிரச்சினை ஏற்பட்ட அந்த 10 வயது சிறுமி மகாலட்சுமி உயிரிழந்தாள். அந்த சிறுமியின் தாயாரான தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.