பெப்சி-தயாரிப்பாளர் சங்கம் திடீர் மோதல்: வெளியான அதிரடி அறிவிப்பு!

9c9bf63290a06a02e237a64d29597caa

பெப்ஸி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த மோதல் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது என்பதும் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் இனி தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்கலாம் என்றும் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த்‌ திரையுலகம்‌ சமூகமாகவும்‌, பொருளாதார இழப்பை தவிர்க்கும்‌ வகையில்‌ இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள்‌, மற்றும்‌ தொழிலாளர்‌ சம்மேளனத்‌ தலைவா்‌ மற்றும்‌ நிர்வாகிகளுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக திரு.ஆர்‌.கே.செல்வமணி அவாகளின்‌ தலைமையிலான நிர்வாகிகள்‌ ஒப்புக்கொண்டார்கள்‌.

ஆனால்‌, அடுத்த நாளே தயாரிப்பாளர்கள்‌ அனைவருக்கும்‌ அதிர்ச்சி அளிக்கும்‌ வகையில்‌ சம்மேளனத்‌ தலைவர்‌ திரு.ஆர்‌.கே.செல்வமணி அவர்கள்‌ தயாரிப்பாளர்களின்‌ நலன்களை சீர்குலைக்கும்‌ வகையில்‌ தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்கு உரியது.

ஆகவே, தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளாகள்‌ நலன்‌ கருதியும்‌, தமிழ்த்‌ திரையுலகத்தை காப்பாற்றும்‌ வகையிலும்‌. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தில்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ 06.08.2021-அன்று நடைபெற்று கீழ்கண்ட தீர்மானங்கள்‌ ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்‌ 

1. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கும்‌, தென்னிந்தியத்‌ திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்திற்கும்‌ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ 06.08.2021 முதல்‌, தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க உறுப்பினர்களை எந்த வகையிலும்‌ கட்டுபடுத்தாது என்று தீரமானம்‌ நிறைவேற்றப்பட்டது.

2. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள்‌ தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக்கொண்டு, திரைப்படத்திற்குண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும்‌ மேற்கொள்ளலாம்‌ என்று ஒரு மனதாக தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

3. தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கும்‌, தென்னிந்தியத்‌ திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்திற்கும்‌ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, தொடர்ந்து தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளாகள்‌ சங்கத்தினை அலட்சியப்படுத்தி வரும்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்துடன்‌ எந்த ஒரு பேச்சுவார்த்தையும்‌ கிடையாது என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

4. மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும்‌ திரைப்பட தயாரிப்பு பணிகளை செய்வதற்கோ எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ பணிசெய்பவர்களை தடுத்தாலோ, அவர்கள்‌ மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

224979f23be41f6ee57e210de4a7c6b3
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.