5 நிமிடத்தில் பாட்டியின் கைப்பக்குவத்தில் மிளகு ரசம்! நம்ம வீட்டுலயும் ட்ரை பண்ணலாம் வாங்க…

இந்த குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளித்தொல்லை வரக்கூடும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டிலே கைப்பக்குவ மருந்துகளை மேற்கொள்ளவது சிறந்தது. பொதுவாக சளி , இருமல், பசியின்மை , உடல்வலி ,அசதி என அனைத்திற்கும் சிறந்த மருந்து வீட்டிலே பாட்டியின் கைப்பக்குவத்தில் தயார் செய்யும் மிளகு ரசம் தான்.

இந்த ஒரு ரசம் நம் அனைத்து பிரச்னைக்கு சிறந்த மருந்தாக அமையும். மேலும் இதை தயார் செய்ய அதிக செலவும் ஆவதில்லை, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக செய்து முடித்து விடலாம்.

பாட்டியின் கைப்பக்குவத்தில் சமைக்கும் மிளகு ரசத்திற்கு இணையானது சுவை வேறு எதுவும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கும் சுவையும் மருத்துவ குணமும் நிறைந்தது தான் இந்த மிளகு ரசம்.சூடான சத்தத்துடன் கூடிய மிளகு ரசம் ஜீரணிக்க எளிதானது .

மிளகு ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

1 கப் -துவரம் பருப்பு

சிறிய உருண்டை- புளி, (தோராயமாக ½ டீஸ்பூன் 1 கப் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்)

2 தேக்கரண்டி -கருப்பு மிளகுத்தூள்

1 அங்குல துண்டு – இஞ்சி,( நறுக்கியது)

4-5 பல் – பூண்டு

1 தேக்கரண்டி – வெந்தயம்

ஒரு சிட்டிகை – மஞ்சள்

1 தேக்கரண்டி – வெல்லம்

சுவைக்கு ஏற்ப – உப்பு,

1 தேக்கரண்டி -நெய்

1 தேக்கரண்டி – கடுகு

1 டீஸ்பூன்- ஜீரா அல்லது சீரகம்

½ தேக்கரண்டி -கறிவேப்பிலை

3 கப் -தண்ணீர்

செய்முறை:

முதலில் துவரம் பருப்பைக் கழுவி தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு சிறிய வாணலியில், கருப்பு மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை குறைந்த வெப்பத்தில் சில நிமிடங்கள் வறுக்கவும்.

சூடு ஆறியதும் மிக்சியில் மாற்றி நன்றாக பேஸ்டாக அரைக்கவும்.

ஊறவைத்த பருப்பை 3 கப் தண்ணீருடன் பிரஷர் குக்கரில் மிதமான சூட்டில் 4-5 விசில் வரை வேகவைக்கவும்.

அதில் ஊறவைத்த புளியைப் பிழிந்து, வடிகட்டி, வேகவைத்த பருப்பில் புளி தண்ணீரை மட்டும் சேர்க்கவும்.
பின்னர் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.மஞ்சள்தூள் சேர்க்கவும்.

தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம் .

அடுத்ததாக இந்த கலவையில் வெல்லம் மற்றும் உப்பு சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில், நெய் அல்லது எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும்.

கேரட் ஜீஸ் குடிக்காத குழந்தைகளுக்கு கேரட் இட்லி செய்து கொடுத்து பாருங்கா… விரும்பி சாப்பிடுவாங்க….

கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் , அதில் கலந்து வைத்துள்ள ரச கலவையை கலக்கவும் .

ரசம் சமைக்கும் போது அதை கொதிக்க வைக்க கூடாது. சூடு ஏறி கொதி வரும் முன் அடுப்பை அனைத்து விட வேண்டும், இந்த நேரத்தில் மல்லி தலை தூவினாம் வாசனையாக இருக்கும்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.