Connect with us

மக்கள் பிரச்சனைகளை அதிமுகவால் மட்டுமே தீர்க்க முடியும்; இரட்டை இலைக்கே ஓட்டு போடுங்கள்!

அதிமுக

தமிழகம்

மக்கள் பிரச்சனைகளை அதிமுகவால் மட்டுமே தீர்க்க முடியும்; இரட்டை இலைக்கே ஓட்டு போடுங்கள்!

மக்கள் பிரச்சனைகளை அதிமுகவால் மட்டுமே தீர்க்க முடியும்; இரட்டை இலைக்கே ஓட்டு போடுங்கள்!

இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி வருகின்ற சனிக்கிழமை தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக பலரும் தேர்தல் பரப்புரையில் அதி தீவிரம் காட்டிக் கொண்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது தோல்வியை ஈடுகட்டும் வகையில் எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பரப்புரையில் மும்முரம் காட்டி கொண்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் பரப்புரையின் போது திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளை பற்றி விமர்சனம் செய்து கொண்டு வருவார். அதோடு மட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சாதனைகளையும் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்பார்.

அந்த வகையில் மக்கள் பிரச்சினைகளை திமுகவால் மட்டுமே தீர்க்க முடியும் என்று பரப்புரையில் இபிஎஸ் கூறியுள்ளார். மக்கள் பிரச்சினைகளை அதிமுகவினரால் தான் தீர்க்க முடியும் என்பதால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

தேர்தலுக்கு முன் வெளியிட்ட அறிவிப்புகள் திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பேசினார் .பத்தாண்டுகள் சிறப்பான ஆட்சி செய்ததால் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம் என்று ஓசூரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார். நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க தயார் எனக் கூறியும் முதல்வரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை என்று இதில் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top