ஜிஎஸ்டி வரி யால் மக்களுக்கு பாதிப்பு இல்லை… பாஜக நிர்வாகி பரபரப்பு கருத்து!

ஜி எஸ் டி வரியினால் மக்கள் பாதிக்கப்படுவதாக தமிழகத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் இன்று மதியம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் இன்று கும்பகோணத்தில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் . அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,

ஜிஎஸ்டி வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தமிழகத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது . கடந்த தேர்தலில் பண மதிப்பிழப்பு பற்றி தவறான கருத்து பரப்பப்பட்டது. அதனைப் போல் தற்போது ஜிஎஸ்டி வரி குறித்து தமிழகத்தில் தவறான கருத்து பரப்பப்படுகிறது.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய பொது தேர்தலில் GST வரியினால் எவ்வித தாக்கத்தையும் மக்களிடம் ஏற்படுத்தாது என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.

சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருள் களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை எனகருப்பு முருகானந்தம் மேலும் தெரிவித்தார்.

பெரியார் சிலை இடிப்பு தொடர்பாக பேசியதற்காக கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கருப்பு முருகானந்தம் கண்டனம் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment