மக்களே மாஸ்க் போடாமல் வெளிய போகாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க! அபராத தொகை உயர்வு..!

தலை கவசம் உயிர் கவசம் என்பது போலத்தான் வாசகங்கள் அதிகமாக காணப்படும். ஒவ்வொரு சாலைகளிலும் தலைக்கவசம் அணிந்து கொண்டுதான் இருசக்கர வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டும் என்ற விதிகளும் நடைமுறையில் உள்ளது. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணம் செய்தால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சூழ்நிலையில் தலைக்கவசத்தை விட முக கவசத்திற்கு காவல் துறையினர் பெரும் முக்கியத்துவம் அளித்து கொண்டு வருகின்றனர்.  ஏனென்றால் சமீபகாலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு எதிர்பாராத விதமாக மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

அனைவரும் மீண்டும் முககவசம் அணியும் கட்டாயத்துக்குள் சென்று விட்டனர். சாலைகளில் போக்குவரத்து காவல் துறையினரும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அபராதத் தொகை உயர்த்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது அதன்படி முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முககவசம்  அணியாதவர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் ரூபாய் 200 லிருந்து ரூபாய் 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூபாய் 500 அபராதம் விதித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment