ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை மும்பை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் பத்து அணிகளும் பங்கேற்றும் விளையாடி வருகின்றன.
இதுவரை 44 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர். ஐபில் கிரிக்கெட்டில் வரும் 6-ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை பல பரீட்சை நடத்துகிறது. பொதுவாக சென்னை அணிக்கு அனைத்து மாநிலத்திலும் ரசிகர்களின் படை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதிலும் இந்த ஆண்டு இது தோனியின் கடைசி ஐபில் ஆக இருக்க அதிகமாக வாய்ப்பிருப்பதால் ரசிகர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தோனியை காண படையெடுத்து செல்கின்றனர்.
6-ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது. இதற்காக மழையை கூட பொருட்படுத்தாமல் இரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக மழையை கூட பொருட்படுத்தாமல் ரசிகர்கள் சேப்பாக்கம் கவுண்டர்களில் இரவு முதலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கவனமாக பேசுங்கள்… அமைச்சர்களுக்கு ஸ்டாலின் திடீர் அட்வைஸ்!
இதில் ரசிகர்கள் சிலர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர் எனப்து குறிப்பிடத்தக்கது.