Connect with us

உதய சூரியனை தவிர வேறு பக்கம் திரும்பாத மக்கள்; நன்றி சொல்ல நேரில் வருவேன்!

திமுக

தமிழகம்

உதய சூரியனை தவிர வேறு பக்கம் திரும்பாத மக்கள்; நன்றி சொல்ல நேரில் வருவேன்!

உதய சூரியனை தவிர வேறு பக்கம் திரும்பாத மக்கள்; நன்றி சொல்ல நேரில் வருவேன்!

நேற்றைய தினம் திமுகவினர் மத்தியில் பெரும் கொண்டாட்டமாக நாளாக காணப்பட்டது. ஏனென்றால் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது. அதில் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ் நாட்டை அமைப்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை முன்னிலும் திறம்பட கொண்டு செலுத்த ஊக்கமளித்து வாக்களித்தவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு வாக்களித்த தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம் தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

21 மாநகராட்சி, 132 நகராட்சி, 435 பேரூராட்சி என கைப்பற்றி தமிழ்நாட்டையே முழுவதுமாக வென்றுள்ளது திமுக கூட்டணி என்றும் கூறினார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் மக்களிடையே திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

திமுகவுக்கு செல்வாக்கு அதிகரிப்பதைக் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் மூலம் மக்களை திசை திருப்ப முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார். ஆனால் மக்கள் உதயசூரியன் தவிர வேறு பக்கம் திரும்ப மாட்டோம் என்பதை காட்டி விட்டார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

கொரோனா  கட்டுப்பாடு காரணமாக நேரடியாக வந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இயலவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். காணொலி மூலமாக பெரும்பான்மை மக்களை சந்தித்தேன் என்றும் அவர் கூறினார். வெற்றியை வழங்கிய மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க நிச்சயம் வருவேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top