மக்களே பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து கிளம்பத் தயாரா?.. 10409 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையானது உழவர்களின் பண்டிகை என்பதால் கிராமப் புறங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

சென்னை, கோவை போன்ற வெளியூர்களில் வேலை செய்வோர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

பொதுமக்கள் டூ வீலர், கார், ரயில், பேருந்து எனப் பல வகையான போக்குவரத்துகள் மூலம் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சொந்த ஊருக்குச் செல்ல 11, 12, 13 என 3 நாட்களுக்கு 17,000 க்கும் அதிகமான பேருந்துகளை இயக்கியது.

இதன் மூலம் சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து 10,00,000 க்கும் அதிகமானோர் சொந்த ஊர் சென்று அடைந்தனர்.

இதில் 8126 சிறப்பு பேருந்துகளும் அடக்கம். பொங்கல் பண்டிகை இன்றுடன் முடிவடையும் நிலையில் பொதுமக்கள் மீண்டும் சொந்த ஊரில் திரும்புகின்றனர்.

இதன் பொருட்டு தமிழக அரசு 17, 18, 19 என மூன்று நாட்களுக்கு சென்னைக்கு கூடுதலாக 3,797 சிறப்பு பேருந்துகளையும் பிற ஊர்களுக்கு கூடுதலாக 6,612 சிறப்பு பேருந்துகளையும் இயக்குகின்றது.

மேலும் சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க போலீஸ் தரப்பில் பெருங்களத்தூரில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.