ஆங்காங்கே வெடித்த மின் ஸ்கூட்டர்கள்!! வாங்க தயங்கும் மக்கள்? விற்பனை கடும் சரிவு..!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு கூட அச்சமடைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி மின்சார வாகனங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.
அதோடு மட்டுமில்லாமல் மின்சார இருசக்கர வாகனங்களில் வரும் அடுத்தடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மின்சாரம் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் மின்சார ஸ்கூட்டர் விற்பனை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரியும் சம்பவம் எதிரொலியாக இந்தியாவில் அவற்றின் விற்பனை சற்று சரிந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஒகினாவா, ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களின் மின் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. தீப்பிடித்து எரியும் சம்பவங்களால் மின் ஸ்கூட்டர்களை வாங்க வாடிக்கையாளர்கள் இடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மின் ஸ்கூட்டர்கள் விற்பனை சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர். பேட்டரியில் கோளாறு உள்ளதாக ஒகினாவா நிறுவனம் 3215 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளன.
மின் ஸ்கூட்டர் தீ விபத்து குறித்து ஆராய பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையை வாடிக்கையாளர்கள் பொருத்து இருந்து கவனித்து வருவதால் இந்த விற்பனை சரிவு தற்காலிகமானது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
