Connect with us

6 மாவட மக்களே கவனமா இருங்க!! – வானிலை மையம் எச்சரிக்கை!!

34839005 - water droplets falling into the hand

தமிழகம்

6 மாவட மக்களே கவனமா இருங்க!! – வானிலை மையம் எச்சரிக்கை!!

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

இவ்வாறாக வருகின்ற 10-ம் தேதி வரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top