Connect with us

உக்ரைனை விட்டு போலந்து நாட்டுக்கு நகரும் மக்கள்….! 3.60 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்!!

poland ukraines

News

உக்ரைனை விட்டு போலந்து நாட்டுக்கு நகரும் மக்கள்….! 3.60 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்!!

உக்ரைனை விட்டு போலந்து நாட்டுக்கு நகரும் மக்கள்….! 3.60 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்!!

உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளது. இதனால் உக்ரைன் நாட்டில் வாழும் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் சுமார் 3.68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா சபை கூறியுள்ளது.

அதன்படி உக்ரைன் நாட்டில் இருந்து 3.68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ரஷ்யா தீவிர தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

உக்ரேனில் இருந்து அதன் அண்டை நாடான போலந்து நாட்டில் அதிக அளவு மக்கள் செல்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அதன்படி போலந்து நாட்டில் மட்டும் சுமார் 1.56 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் அளித்துள்ளது.

மால்டோவா, ருமேனியா நாடுகளுக்கு  அதிகளவிலான உக்ரைனியர்கள் தஞ்சமடைந்துள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில்கள் மட்டுமின்றி நடைப் பயணமாகவும் ஏராளமானோர் வெளியேறுகின்றனர். அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வரும் உக்ரைனியர்கள்  எண்ணிக்கைஅதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top