தலைநகரை தாக்கிய ரஷ்யா-மெட்ரோ சுரங்கப்பாதைகளில் பதுங்கும் மக்கள்!
இன்று காலை முதலே உலக நாடுகள் அனைத்திலும் மிகவும் பதட்டமான சூழ்நிலையே நினைத்துக் கொண்டு வருகிறது. ஏனென்றால் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக இராணுவ தளங்களை ரஷ்ய ராணுவத்தினர் குறிவைத்து தாக்குகின்றனர். குறிப்பாக உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறது.
இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த பதட்டமான சூழ்நிலையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தலைநகரில் உள்ள மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். வழக்கமாக குண்டு வீசப்படும்போதும் பதுங்கு குழிகளில் பதுங்கி இராணுவத்தினர், மக்கள் உயிர் பிழைப்பர். இருப்பினும் உக்ரைன் அதிபர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
