கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு கூட்டமானது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கின் தீர்ப்பானது நேற்று முன்தினம் வந்தது.
அப்போது பேசிய நீதிபதி அதிமுக இடைக்கால பொது செயலாளராக இபிஎஸ் தேர்வானது செல்லாது என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார். அதோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என கூறினார்.
இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ஓபிஎஸ்யால் கட்சி தோற்றதா? என்ற கேள்வி
அனைவர் இடத்திலும் தெரியும் என கூறியுள்ளார்.
அதோடு ஈபிஎஸ்-க்கு சொந்தமான நபர்களை வெற்றிப்பெற வைத்தாகவும், அதிமுகவானது மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதோடு தற்போது வரையிலும் ஒருங்கிணைப்பாளர் என்பது ஓபிஎஸ் என்று கூறியுள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் தெரிவித்திருப்பது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.