Connect with us

அவசர நிலை பிரகடனத்தை மீறி போராட்டத்தில் மக்கள்..! ஐரோப்பா, அமெரிக்கா கண்டனம்;

போராட்டம்

News

அவசர நிலை பிரகடனத்தை மீறி போராட்டத்தில் மக்கள்..! ஐரோப்பா, அமெரிக்கா கண்டனம்;

தற்போது இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக அவசர நிலையை பிரகடனம் அமல் படுத்தப்பட்டது.

அதோடு மட்டுமில்லாமல் ராணுவத்தினருக்கும் பல்வேறு விதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவசர நிலையை மீறி இலங்கை மக்கள் போராடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையில் பல்வேறு ஊர்களில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இலங்கை அவசர நிலை பிரகடனப் படுத்துவதாக அதிபர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார்.

வெள்ளிக்கிழமை முதல் அவசரநிலை அமலுக்கு வந்ததையடுத்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அதிபர் மாளிகைக்கு முன்னால் உள்ள காலிமுகத்திடலில் போராட்டம் வலுப்பெற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

28 நாளாக இன்றும் காலிமுகத்திடலில் திரண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்சக்கள் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

கொழும்பு ஆமர் வீதியில் முக்கிய சந்திப்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். எரிவாயு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று மக்கள் திட்டவட்டமாகக் கூறினார்.

கொழும்பு நகரின் பல்வேறு இடங்களிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எரிவாயு கொள்கலனை வைத்து மக்கள் வீதியை மறைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை பிரகடனம் பின்னரும் போராட்டங்கள் நடைபெறுவதால் தடுக்க காவல் துறையினருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தடையையும் மீறி நடைபெறும் போராட்டங்கள் இலங்கையில் பதற்றநிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.

அமைதியான முறையில் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்கு, கைது செய்யவோ அவசரகால சட்டம் பயன்படுத்தக்கூடாது என்றும் இலங்கை பார் கவுன்சில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top