Entertainment
மதுமிதா வெளியேறிய அதிர்ச்சியில் மக்கள்!!
விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், அனைவரின் வீடுகளிலும் பேசுகிற டாப்பிக் ஆகிவிட்ட பிக் பாஸ் கடந்த ஒரு வாரமாக பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
முந்தைய சீசன்களைவிட, அதிக அளவிலான விஷயங்கள் நடக்கப் பெறுவதாலோ என்னவோ இதன்மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வனிதா மாஸ் என்ட்ரி கொடுக்கிறேன் என்ற பெயரில் வீட்டை ரணகளமாக்கிவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தினமும் 3 ப்ரோமோக்கள் வெளியிடப்படும். அந்த ப்ரோமோக்கள் மதியத்திற்குள் வெளியாகும். ஆனால், நேற்றைய ப்ரோமோ மிகத் தாமதமாக வெளியானது.
முதல் ப்ரோமோ வெளியாகி பல அதிர்ச்சியில் மூழ்கச் செய்தது,
அதாவது பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேறும்படியாக காட்டப்பட்டன. கையில் கட்டுடன் மதுமிதா வெளியே வந்தார்.
கமல் ஹாசன் வருத்தப்பட்டு ‘தட்டில் வைத்துக்கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு விட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது.’ என்றார்.
மேலும் ‘இந்த தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றும் கூறினார். அதற்கு மதுமிதா மனவருத்தத்துடன் சிரிப்பதுபோல் இருந்தது.
அதே ப்ரொமோவில் மதுமிதா சேரனிடம் கூறியது “மதுமிதா எடுத்தது ஒரு தவறான முடிவு, தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும்” என்று கூறினார்.
மதுமிதா வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
