ஆதார் இருக்கையில் மக்கள் ஐடி எதற்கு? – விஜயகாந்த் கேள்வி!

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதை தமிழக அரசு வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, மக்கள் ஐடி என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகி உள்ளது.

புதுக்கோட்டையில் பரபரப்பு! காளையர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு!!

ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் தமிழக அரசு ஆதார் எண்ணை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் ஐடி திட்டம் எதற்காக? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். தனி அடையாள எண் வழங்க முன்வந்தால் நாட்டில் குழப்பம் ஏற்படாதா என கூறியுள்ளார்.

இந்த திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்ட வேண்டும் என்றும் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ரேஷனில் சிறு தானியம், தேங்காய் எண்ணெய்: அமைச்சர் சக்கரபாணி தகவல்!

மேலும், மக்கள் ஐடி போன்ற திட்டங்களை தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.