மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக இருங்கள்!!: அதிபர் கோரிக்கை

நேற்றைய தினத்தில் இருந்து இலங்கையில் பெரும் கலவரம் நிலவுகிறது. நேற்றைய தினம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

பல இடங்களில் ராஜபக்சவின் குண்டர்கள் களம் இறங்கியதால் போராட்டக் களம் சூடு பிடித்தது. இந்த போராட்டத்தில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இலங்கை அதிபர் பொதுமக்களிடம் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார் கருத்து மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும் கோட்டபய ராஜபக்சே டுவிட்டரில் கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment