நாளை முழு ஊரடங்கின் எதிரொலியாக இன்றைய தினமே குவிந்த மக்கள்! நோய் பரவும் அபாயம் உள்ளதோ?

நாளைய தினம் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நாளை தினம் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய அளவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி பதிவாகியுள்ளது.

நம் தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கி விட்டதால் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நாளைய தினம் முழு ஊரடங்கு. இதற்காக மக்கள் இன்றைய தினமே அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

அவற்றுள் நாளைய தினத்திற்காக மீன் வாங்குவதற்கு இன்றைய தினமே மக்கள் கூட்டம் மீன் சந்தைகளில் அலைமோதி வருகிறது. குறிப்பாக சென்னை காசிமேடு பகுதியில் உள்ள மீன் சந்தையில் மக்களின் கூட்டம் ஏராளமாக உள்ளது. அங்கு ஒரே இடத்தில் 3000 பேருக்கு குவிந்தால் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் மீன்களின் விலையும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டம் கூடுவதை தவிர்க்க காசிமேடு மீன் சந்தையில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க மக்கள் கூட்டம் குவிந்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment