பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை அவசியமில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை அபிராமபுரத்தில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் வேலூர், தருமபுரி மதுரை, கரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை அவசியமில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.