Connect with us

வைரல்: கடலில் திடீரென்று உயிருடன் கரை ஒதுங்கிய மீன்களை அள்ளி சென்ற மக்கள்

fish

தமிழகம்

வைரல்: கடலில் திடீரென்று உயிருடன் கரை ஒதுங்கிய மீன்களை அள்ளி சென்ற மக்கள்

திருச்சூர் மாவட்டம் வாடானபள்ளி என்ற இடத்தில் கடற்கரை ஓரத்தில் ஆயிரக்கணக்கான மத்தி மீன்கள் கரை ஒதுங்கியது மக்கள் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வாடான பள்ளி என்ற இடத்தில் கடலில் திடீரென்று மத்தி மீன்கள் ஆயிரக்கணக்கான மத்தி மீன்கள் கடல் அலையில் அடித்து கொண்டுவரப்பட்டு கரை ஒதுங்கியது உயிருடன் துடித்துக் கொண்டிருந்த மத்தி மீன்கள்

இது பற்றி தகவல் அறிந்ததும் கடற்கரையில் கூடிய சிறுவர்கள் பெரியவர்கள் என கரை ஒதுங்கிய மத்தி மீன்களை ஆர்வமுடன் எடுத்துச் செல்லும் காட்சிகள் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பொதுவாக கேரளாவில் உள்ள அரபிக் கடலில் சில ஆண்டுகளாக நெய் மத்தி என்று அழைக்கப்படும் இந்த வகை மீன்கள் குறைந்து வருவதாக தகவல் இருந்த நிலையில் தற்போது கடந்த ஜூலை முதல் இந்த வகை நெய் மத்திகள் கேரள கடலில் காணப்படுவதாகவும் அவ்வப்போது நெய் மத்திகள் கரை ஒதுங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top